ரோட்டரியின் தேசத்தை நிர்மாணிப்பவர் என்ற ஆசிரியர்களுக்கான விருது
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மான்செஸ்டர் சார்பில் சர்வதேச ரோட்டரியின் தேசத்தை நிர்மாணிப்பவர் என்ற ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மான்செஸ்டர் சார்பில் தேசத்தின் நிர்மாணிப்பவர் என்று விருது வழங்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது. ஏழாவது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 ஆசிரியர்களுக்கு ரோட்டரியின் தேசத்தை நிர்மாணிப்பவர் என்ற விருது ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மான்செஸ்டர் சார்பில் இந்த ஆண்டு வழங்கப்பட்டது.
விழாவிற்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் ரோட்டரி செந்தில் ராஜகோபால் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு திட்ட தலைவர் ரோட்டரி ரமேஷ், ரோட்டரி கோயம்புத்தூர் மான்செஸ்டர் தலைவர் பிரின்ஸ் கமல்நாத், செயலாளர் ரமேஷ் ராஜகோபால், பொருளாளர் மகேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை தாங்கினார். கௌரவ விருந்தினராக பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் கலந்து கொண்டார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் 29 பேருக்கு விருதினை வழங்கினர்.
இதுகுறித்து ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மான்செஸ்டர் தலைவர் பிரின்ஸ் கமல்நாத் பேசுகையில், எங்கள் சங்கம் சார்பில் ஆண்டு தோறும் இவ்விருதிணை ஆசிரியர்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறோம். ஏழாவது வருடமாக தொடர்ந்து வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் பணிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் தேசத்தை நிர்மாணிப்பவர் என்ற
விருதினை தொடர்ந்து நாங்கள் செய்து வருவோம் என கூறினார்.
இதில் ரோட்டரி சீதாராம், ரோட்டரி விவேக் கனகராஜ் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்