WhatsApp | 9087316855
Advertise

Rs 360 Crore drugs seized in water can; DMK councilor arrested

தண்ணீர் கேனில் கடத்த முயன்ற ரூ.360 கோடி போதைப்பொருள் பறிமுதல்; திமுக கவுன்சிலர் கைது

ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற, 360 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘கோகைன்’ போதைப் பொருளை, கடற்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கீழக்கரை நகராட்சி தி.மு.க., கவுன்சிலர், முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே மண்டபம் – வேதாளை சாலையில், நேற்று முன்தினம் இரவு, கடற்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.வேகமாக சென்ற சொகுசு காரை மடக்கி போலீசார் சோதனையிட்டனர். அதில், 20 லிட்டர், 30 கேன்களில், கோகைன் போதைப் பொருளுக்கான மூலப்பொருட்கள், 360 கிலோ இருந்தன.இந்த போதைப் பொருளை, வேதாளை சாதிக் அலி, 36, என்பவரின் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்தது தெரிந்தது.அந்த போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்து, காரில் இருந்த சகோதரர்களான, கீழக்கரை நகராட்சி தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன், 45, தற்போதைய, 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ், 42, ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு, 360 கோடி ரூபாய். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களை, இலங்கைக்கு கடத்த முயன்று, போலீசார் பறிமுதல் செய்தது இதுவே முதல் முறை.கடத்தல் சகோதரர்களான தி.மு.க.,வினருக்கு, சென்னை டு ராமநாதபுரம் சரக்கு லாரி சர்வீஸ் நிறுவனம் உள்ளது. இவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல், ‘மாபியா’ கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என, மத்திய -மாநில உளவு போலீசார் விசாரித்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை, மீனவர்கள் போர்வையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த முயன்றது, அப்பாவி மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இதனால், இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என, அப்பாவி மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe