WhatsApp | 9087316855
Advertise

RS Puram Branch All India Life Insurance Agents Association Annual Celebration

ஆர்.எஸ் புரம் கிளை அகில இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர் சம்மேளனம் ஆண்டு விழா

ஆர்.எஸ் புரம் கிளை அகில இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர் சம்மேளனம் ஆண்டு விழா மற்றும்
பொதுக்குழு கூட்டம்

அகில இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர் சம்மேளனம் கோவை ரத்தின சபாபதி புரம் கிளை சார்பில் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் காந்திபுரம் ஜிபி சிக்னல் பகுதியில் உள்ள ஜிபி கிராண்ட் கேலக்ஸி மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ் புரம் கிளை துணைத் தலைவர் ஸ்ரீதர் வரவேற்புரை வழங்கினார். பொருளாளர் கல்யாணி தங்க ராஜா நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். செயலாளர் சேகர் ஆண்டறிக்கை வாசித்தார். ஆர்.எஸ் புரம் கிளை தலைவர் கோபால்சாமி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தென் மண்டல மேலாளர் (ஓய்வு) தாமோதரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சிக்கு கோவை கோட்ட துணைத் தலைவர் என் ராமசாமி, துணைத்தலைவர் எம்.ராமசாமி அகில இந்திய செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், கோவை கோட்ட பொருளாளர் சந்திரசேகரன், ஆர்.எஸ் புரம் உதவி கிளை மேலாளர் திவ்யா, பெரியநாயக்கன்பாளையம் பொறுப்பு கிளை மேலாளர் மணிகண்டன், வடவள்ளி கிளை மேலாளர் ஜோசப் ஆரோக்கியநாதன், ஆர்.எஸ் புரம் முதுநிலை கிளை மேலாளர் துரைராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் கோவை கோட்டத் தலைவர் குமணன் தலைமை உரையாற்றினார். ஜெயந்தா ஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். கிளை துணைத் தலைவர் ராம் மனோகர் லோகியா நன்றி உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு இணை செயலாளர்கள் நாராயணன், ஜெகநாதன், ராதா சக்திவேல், ஜெயக்குமார் மற்றும் ஆர்.எஸ் புரம் கிளை செயற்குழு உறுப்பினர்கள், கோட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோட்டத்தில் உள்ள அனைத்து கிளை பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe