கால்நடைகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஆம்புலன்ஸ் வசதி செய்ய கோவையில் சமூக ஆர்வலர் கோரிக்கை
24 மணி நேரமும் கால்நடை மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் கோவையில் சமூக ஆர்வலர் கோரிக்கை
கோவை பட்டேல் சாலையில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனையாளரும், சமூக ஆர்வலருமான
விகாஸ் மனோட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்,
கோவையில் சாய்பாபா காலனி, ஆர் எஸ் புரம் காந்திபுரம் ஆகிய பல்வேறு பகுதிகளில் பசுமாடுகளை வளர்ப்பவர்கள் மேய்ச்சலுக்காக குப்பை கூளங்களில் சாப்பிட விடுகின்றனர். அப்போது கால்நடைகள் பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து உட்கொள்கின்றன. இதனால் பசு மாடுகளுக்கு பல்வேறு வகையான உபாதைகள் ஏற்படுகிறது. எனவே கால்நடைகளை இதுபோன்று குப்பைகள், பிளாஸ்டிக்குகளை சாப்பிட அனுமதிக்காமல் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்றார். மேலும், 24 மணி நேரமும் கால்நடை மருத்துவமனைகள் செயல்பட வேண்டும்.
சில மாதங்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் லம்பி வைரஸ் என்னும் கொடிய நோயால் ஏராளமான பசு மாடுகள் இறந்துள்ளன. இதுபோன்று சூழ்நிலையில் கால்நடைகளை பராமரிக்க 24 மணி நேரமும் கால்நடை மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்றார். கால்நடை மருத்துவமனைகள் இரவு நேரங்களில் செயல்படுவதில்லை. இந்நிலையில் இரவு நேரங்களின்போது விபத்துக்குள்ளாகும் கால்நடைகள், உபாதைகளால் அவதிப்படும் கால்நடைகள் இறக்க நேரிடும் சூழ்நிலை உள்ளது. எனவே 24 மணி நேரமும் கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருத்துவர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
சமூக ஆர்வலர் விகாஸ் மனோட் கோவை ஆடிஸ் வீதியில் உள்ள பூங்காவில் கால்நடைகள் பாதுகாப்பிற்காக வேண்டி சிறப்பு வழிபாட்டு பூஜை, யானைகள் இறக்காமல் இருக்க சிறப்பு பூஜை, மழை வேண்டி யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.