WhatsApp | 9087316855
Advertise

South India’s first training center for diamond and gold jewelery making – Video

தென்னிந்தியாவின் முதல் வைரம் மற்றும் தங்க நகைகள் தயாரிப்பதற்கான பயிற்சி மையம்

gதென்னிந்தியாவின் முதல் முதலாக வைரம் மற்றும் தங்க நகைகள் தயாரிப்பதற்கான பயிற்சி மையம் டைமண்ட்ஸ் இந்தியா துவங்குகிறது

மகளிர் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா பயிற்சியோடு ஸ்காலர்ஷிப்பும் பெறலாம்

இந்தியாவில் வைரம் மற்றும் தங்க நகை தயாரிப்புக்கான ஊழியர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது. இவற்றை பூர்த்தி செய்யும் வகையில் கோவையில் முதல் முறையாக பெண்களுக்காகவே பெண்களால் நடத்தப்படும் பயிற்சி மையம் ஆர். எஸ்.புரம் டிபி ரோட்டில் பிப்ரவரி 5ம் தேதி தொடங்க உள்ளது. இது குறித்து வைரம் தங்க நகை தயாரிப்பு ஆசிரியர் முரளிதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டைமண்ட்ஸ் இந்தியா என்னும் இந்த பயிற்சி நிறுவனம் வைரம் மற்றும் வைர நகைகள் மற்றும் தங்க வெள்ளி நகைகளை தயாரிக்கும் தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுக்கும் பயிற்சி அளிக்கும் மையமாக சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.ஆர். எஸ்.புரம் டிபி ரோட்டில் ஒயிட் பில்டிங் என்ற கட்டிடத்தில் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவக்க விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னையில் இருக்கும் சென்னை டைமன் மற்றும் நகைகள் வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி இந்த பயிற்சி நிறுவனத்தை தொடங்கி வைக்க உள்ளார். என்னிடம் பயின்ற மாணவர்கள் கோவை மாவட்டத்திலும், தமிழ்நாடு முழுவதும் வைர நகை வியாபாரம் மற்றும் வைர நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பயிற்சி பணியை விரிவுபடுத்தி இன்று வைர நகை தொழிலை செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கும் வருங்காலத்தில் தொழில்
முனைவோருக்கும், இந்த நிறுவனங்களில் பணியாற்ற தேவையான எல்லா விதமான தொழில் முறை பயிற்சிகளை இந்தியாவிலேயே முதல்முறையாக பயிற்சிக்கு பிறகு நகை தொழில் தொடங்க ஆலோசனை கொடுத்து அவர்களுடைய தொழிலில் உதவி புரிய தொழிலாளர்களையும், தொழிலாளர்களை நிர்வாகிக்க மேலாளர்களையும் உருவாக்கிக் கொடுக்கும் வகையிலும் அவர்களை
தயார் செய்து வருகிறோம். இந்த பணியில் அகிலாண்டேஸ்வரி முரளிதரன் மற்றும் சேஷகோபால் முரளிதரன் ஆகியோரும் பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த பயிற்சி எடுத்துக்கொண்ட தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க தேவையான ஆலோசனைகளும் வழிமுறைகளும் இதைவிட முக்கியமாக தொழிலாளர்களையும் அந்தத் தொழிலாளர்களை நிர்வாகிக்கும் மேலாளர்களையும் இந்த நிறுவனத்தின் மூலமே பயிற்சி அளிக்கப்படும்.
டைமண்ட்ஸ் இந்தியா என்னும் இந்த பயிற்சி நிலையத்தில் மிக சிறப்பு அம்சமாக வருடம் தோறும் 100 தகுதியான மகளிர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக கட்டணம் இல்லாத அதாவது 100% ஸ்காலர்ஷிப் கொடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும், இந்த பயிற்சி காலம் 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை இருக்கும். இந்த பயிற்சியை முழுமையாக பூர்த்தி செய்தவர்கள் நம்முடைய கோவை மாவட்டத்திலும் அல்லது அவர்கள் இருக்கும் ஊருக்கு அருகாமையில் தகுந்த இடத்தில் பணியில் அமர்த்த முழுமையாக உதவிகள் செய்து தரப்படும் என்றார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe