WhatsApp | 9087316855
Advertise

Special meeting and discussion program of YGS

இளைஞர் வழிகாட்டும் பணி சங்கத்தின் சிறப்பு கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

இளைஞர் வழிகாட்டும் பணி சங்கத்தின் சிறப்பு கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில் இளைஞர் வழிகாட்டும் பணி சங்கத்தின் சிறப்பு கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாநில தலைவர் பெருமாள் தலைமையில் இந்திய அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைகள், திருத்தங்கள், இட ஒதுக்கீடு ஜாதி வாரி மத்திய அரசு பணியில் உள் இட ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கிய மூன்று சதவீதம் உள் இட ஒதுக்கீடு பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கண சங்கம் தலைவர் பேராசிரியர் முத்துசாமி, திராவிட தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி, பன்னீர்செல்வம், ஒய் ஜி எஸ் மாநில சட்ட ஆலோசகர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து கூட்டத்தில், தமிழகத்தில் வாழுகின்ற 60 லட்சத்திற்கும் மேற்பட்ட அருந்ததி சமூக மக்களுக்கு மாநில அரசால் 2009 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசர் வழங்கப்பட்ட ஒதுக்கீடு 3% தற்போது உச்ச நீதிமன்ற ஆட்சி பணி தொடர்பான வழக்கு வருகின்ற ஜனவரி 2024 முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகின்ற உள் இட ஒதுக்கீடு 3% வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞரை அமர்த்தி சட்ட பாதுகாப்பு அளித்திட உதவ வேண்டும். மேலும் ஒய் ஜி எஸ் அமைப்பின் சார்பில் இந்த உச்ச நீதிமன்ற வழக்கில் வெற்றி பெறும் வரை பாடுபடுவதற்கு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி 3 சதவீத உள் இட ஒதுக்கீடு மிக குறைவாக உள்ள காரணத்தினால் இச்சமூக மக்கள் பல்வேறு இடங்களில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மூன்று சதவீதம் உள் இட ஒதுக்கீடு ஆறு சதவீதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பேரூர் அருந்ததியர் அறக்கட்டளையின் துணைத் தலைவர் செல்வகுமார், மாநில துணைத் தலைவர் மாறன், ஒய்.ஜி.எஸ் முதன்மை ஆலோசகர் கோல்டன் பொன்னுசாமி, பேரூர்
ஏ.ஆர் மடம் முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி, மாநில பொருளாளர் பழனிச்சாமி, துணை பொதுச்செயலாளர் விடுதலைச் செல்வன், ஜெயராஜ், ரவிச்சந்திரன், சுமதி, பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் பெருமாள்ராஜ், ஒய்.ஜி.எஸ் முன்னாள் மாநில தலைவர் பொன்னுச்சாமி, மாநில பொதுச் செயலாளர் நடராஜன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜன், ஒய்.ஜி. எஸ் மாநிலத்துணைத் தலைவர்கள் சுகுமாரன், செந்தில்குமார், சேலம் மாவட்டம் ஒய் ஜி எஸ் தலைவர் நாகராசன், திண்டுக்கல் மாவட்ட ஒய் ஜி எஸ் கிளை பொதுச் செயலாளர் வல்லவன் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe