WhatsApp | 9087316855
Advertise

Sri Ramakrishna Hospital Awareness drill on accident rescue

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் விபத்து மீட்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி

கோவை ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில்
விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி


கோவை ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில்
விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் பேருந்து பைக் மீது மோதாமல் இருக்க மின் கம்பத்தில் மோதியதில் விபத்தில் சிக்கி பலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடுபவது போன்றும், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு செல்வது போன்றும் ஒத்திகை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டாக்டர் மஞ்சுநாத் கூறியதாவது,
விபத்தில் சிக்கியவர்களை சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு என 4 வகைகளாக அடையாளப்படுத்தப்படுவார்கள். இவற்றில் தலையில் அடிபட்டு அபாய கட்டத்தில் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் குழந்தைகள் ஆகியோர்கள் சிவப்பு எனவும், கை கால் எலும்பு முறிவால் காயமுற்றவர்களை மஞ்சள் எனவும், சிறு, சிறு சிராய்ப்பு காயங்கள் உள்ளவர்களை பச்சை எனவும் வகைப்படுத்தப்படுவார்கள். சம்பவ இடத்தில் பலியானவர்கள் கருப்பு என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

முதலில் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதன் பின்பு மற்றவர்கள் மீட்கப்படுவார்கள். இதற்காக மருத்துவமனையில் ஒரு குழுவினர் தயார் நிலையில் இருப்பார்கள். இந்த ஒத்திகையில் 20 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு மீட்கப்படுவது போல் ஒத்திகை நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன், ராமகிருஷ்ணா மருத்துவமனை மக்கள் தொடர்பு மேலாளர் பிரகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe