WhatsApp | 9087316855
Advertise

Sri Ramakrishna Hospital Cancer Treatment and Research Center releases breast cancer awareness cartoon videos

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி  மையத்தின் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கார்ட்டூன் வீடியோக்கள் வெளியீடு

இந்தியாவில் முதன் முறையாக  ஶ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, ஶ்ரீ ராமகிருஷ்ணாபுற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் சார்பில் மார்பகபுற்றுநோய் விழிப்புணர்வு கார்ட்டூன்வீடியோக்கள் வெளியீடு! 

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுமாதம் அக்டோபர் மாதத்தை முன்னிட்டுகோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் (SRIOR) சார்பில் பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியாவில் முதல்முறையாக அனிமேஷன் கார்ட்டூன் வாகையிலான விழிப்புணர்வு வீடியோக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இன்று (3.10.2023) வெளியிடப்பட்டது. 

முன்னதாக இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் P. குகன் அனைவரையும் வரவேற்றார். 

அவர் பேசுகையில், 

ஆண்டுக்கு ஆண்டு மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை உலகில் அதிகரித்து வருகிறது எனவும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.85 லட்சம் முதல் 1.90 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் கூறினார். மேலும் அவர் இதில் 50 % பெண்கள் புற்றுநோய் முற்றிய நிலைக்கு சென்ற பின்னர்தான் சிகிச்சை தேடி வருகின்றனர் எனவும் அவ்வாறு வருபவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க முடிந்தாலும் அவர்கள் இறப்பை தடுக்க முடிவதில்லைதள்ளிப் போட மட்டுமே முடிகிறது என்று கூறினார்.

“மார்பகபுற்று நோயின் ஆரம்ப நிலையில் பெண்கள் சிகிச்சைக்கு வந்தால் அவர்களை குணப்படுத்த முடியும். இதனால் தான் மார்பகபுற்றுநோய் குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறோம்,” புற்றுநோய்யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றாலும் அது குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு, குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் மார்பக பரிசோதனைகள் செய்துகொண்டால் மார்பக புற்றுநோய் குறித்த அச்சம் இல்லாமல் பெண்கள் இருக்க முடியும், என அவர் கூறினார். 

இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட உருவாக்கப்பட்ட இந்த வீடியோக்களை  எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் சி.ஓ.ஓ.திருமதி. சுவாதி ரோஹித் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. லஷ்மிநாராயண சுவாமி முன்னிலையில் இன்று (3.10.23) வெளியிட்டார்.  

இந்த நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய்சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் P. குகன் மற்றும் இந்த மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் K. கார்த்திகேயன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி திரு.C.V. ராம்குமார்,மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.அழகப்பன். ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த வீடியோக்களை பார்க்க இங்கு வழங்கப்பட்டுள்ள QR code ஐ ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்தால் பார்க்க முடியும். மேலும் இதற்கான பிரத்தியேக இணையதளம் https://mhits.in/SRIOR/breast_cancer_2023/ சென்றும் இதை பார்க்க முடியும். 

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியேக வீடியோக்களில் ‘மார்பக புற்றுநோய் குறித்த கண்ணோட்டம்’, ‘மார்பக புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங்’,’சிகிச்சை மற்றும் சிகிச்சைகளின் பக்கவிளைவுகள்’, ‘கர்ப்ப காலத்தில் மார்பகபுற்றுநோய்’ குறித்த முக்கிய தகவல்கள்உள்ளன. மேலும் இந்த வீடியோக்கள் ஒரு பிரிவில் ‘ஆண்களிடத்தில் ஏற்படும் மார்பக புற்றுநோய்’ குறித்தும் விழிப்புணர்வு செய்திகள் இடம்பெற்றுள்ளன.   ஒரு ஆணின் வயது முதிர்ச்சி, இதற்கு முன்னர் அவர் குடும்பத்தில் எவருக்கும் மார்பக புற்றுநோய் இருந்ததின் வரலாறு, கதிர்வீச்சு மற்றும் ஹார்மோன் திறப்பிபோன்ற சிகிச்சை எடுத்தது, உடல்பருமன் போன்ற சில காரணிகள்ஒரு ஆணுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது என இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  அதேபோல் இந்த விழிப்புணர்வு வீடியோக்களில் ‘மார்பக புற்று நோயைசமாளிப்பது’ மற்றும் ‘மார்பக புற்று நோயை வென்றவர்களின் கதைகள்’ ஆகிய பிரிவுகளும் உள்ளன.மார்பக புற்றுநோய் குறித்த அனைத்து தகவல்களும் மக்கள் எளிய வகையில் பார்க்க,வாசிக்க மற்றும் கேட்க எளிமையான ஆங்கிலம் மற்றும் தமிழில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதம் முழுவதும் மருத்துவமனையில் அனைத்து பணி நாட்களிலும் காலை 9 மணி முதல் 5 மணி வரை இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் பெண்களுக்கு நடத்தப்பட இருக்கிறது. தேவைப்படும் பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனையும் வழங்கப்பட இருக்கிறது.

எனவே தயக்கத்தையும் அச்சத்தையும் கடந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பெண்கள் சிந்தித்து இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டாக்டர் P.குகன் தெரிவித்தார். 

நிறைவாக டாக்டர் கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார். 

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe