கோவையில் சிருஷ்டி 2023 கைவினை கண்காட்சி இன்று முதல் துவக்கம்
தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் கவுன்சில் நடத்தும் ‘சிருஷ்டி 2023’ கண்காட்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 23ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.
தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் கவுன்சில் உறுப்பினர்கள், கைவினை கலைஞர்களின் நலனுக்காக நிதி திரட்ட ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் காட்சியால் ஆண்டு முழுவதும் இவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்தியா முழுவதும் உள்ள கைவினை கலைஞர்கள் இதில் பயன்பெறுவதோடு, அனைத்து விதமான, மாநில கைவினைப் பொருட்களும் ஒரே கூரையின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கைவினை பொருள் விற்பனை 66 அரங்குகளில் நடைபெறுகின்றன.
சிறந்த கைவினைஞர்களால் அருமையாக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் திறமையை கொண்டாடும் விதமாக கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், ஆண் பெண் குழந்தைகள் ஆண், பெண், குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்ற ஆடை வகைகள் வீட்டு அலங்கார பொருட்கள் நகைகள் புதுமையான முறையில் கற்பனை திறன் கொண்டு வடிவமைக்கப்பட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
விழாவில் சிருஷ்டி கன்வினர் வெங்கடலட்சுமி தலைவர் மஞ்சு இளங்கோ உதவி தலைவர் ரூபா விஷ்ணு செயலாளர் ஜெயஸ்ரீ ரவி பொருளாளர் லட்சுமி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த கண்காட்சி தினசரி காலை 10:30 மணி முதல்இரவுஎட்டு மணி வரை நடைபெறும்.