பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் அவர்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு
பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் அவர்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு
என் மண் என் மக்கள் என மக்களுக்காகவே சேவை செய்து கொண்டிருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆசியுடன் பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கோவையில் நடை பயணத்தை மேற்கொண்டார். அதன்படி கணபதி பகுதியில் தொடங்கிய நடைபயணம் சங்கனூர், நல்லம்பாளையம், காமராஜ்புரம் என பல்வேறு பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேறவு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கண்ணப்பநகர் பகுதியில் பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் J.புவனேஸ்வரன் தலைமையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜி அவர்களுக்கு கீரிடம் அணிவித்து வீரவாள் வழங்கி கௌரவித்தனர். அதனை ஓட்டி ஜந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் வசிக்கும் கண்ணப்ப நகர் பகுதியிலுள்ள பெண் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
பின்னர் அப்பகுதி மக்களிடையே உரையாடினார்.அதில் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற வேண்டும் அதற்கு உங்களது ஆதரவை தர வேண்டும் என்று மக்களிடையே கேட்டுக்கொண்டார். பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் அண்ணாமலை ஜி அவர்களுக்காக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் மாவட்டத் தலைவர் Tk.ராஜேந்திரபிரசாத், மாவட்டத் துணைத் தலைவர்கள் சுப்பிரமணி, ஜாக்கி என்கின்ற செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் டேவிட் பிரபாகரன், சதீஷ் ராஜா,மற்றும் மண்டல தலைவர் சுரேஷ் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மற்றும் அய்யாசாமி,
பூ பாண்டி, முருகன், செல்வம் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.