முல்லை மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியில் பயின்ற மாணவன் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்டில் சாதனை
முல்லை மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயின்ற 4வயது மாணவன் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்டில் சாதனை
கோவை சின்ன வேடம்பட்டி பகுதியில், கடந்த 8 ஆண்டுகளக, பள்ளி மாணவ மாணவிகளுக்கு, சிலம்ப கலையை கற்று தருகின்ற, முல்லை, மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைப்பினர், மாணவ, மாணவிகள், கற்று கொண்ட கலையை, அனைவரும் பாராட்டும் வகையில், பல்வேறு முயற்சிகளின் அடிப்படைகளில், சாதனைகளாக மாற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று, கோவை சின்னவேடம் பட்டி பகுதியில், உள்ள ப்ளாக் மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் சின்னவேடம் பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் தமிழ்ச்செல்வி தம்பதியினரின், 4 வயது மகன் கடந்த ஒரு ஆண்டாக சிலம்பம், பயின்று வருகின்ற தன்விக், சிலம்ப கம்புகளில் இருபுறமும் ரிப்பன் கட்டி, சுமார் 5 மணி நேரம் 15 நிமிடங்கள் சுற்றி நிமிடங்கள், சுற்றி சாதனை படைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செய்தியாளரிடம் பேசிய இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ்
பேசுகையில், டிசம்பர் 10 மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகளை மேம்படுத்தும் வகையில் பொதுமக்களிடையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த கருத்தை, முன்னிறுத்தி, இந்த உலக உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை இந்தியன் புக் ஆப் வெர்ல்டு ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துடன், மாணவனின் சாதனையை, அங்கிகரித்ததற்கான, சான்றிதழ்களையும், கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கி பெருமைப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், முல்லை தற்காப்பு கலை அமைப்பின், மேளாளர், கார்த்திக், மற்றும் ப்ளாக் மாரியம்மன் கோவில் கமிட்டி உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு, பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.