WhatsApp | 9087316855
Advertise

Tamil Nadu team won first time champion title in national level karate competition

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணி

கோவை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு! 

ஹரியானா ஒலிம்பிக் அசோசியேசன் அங்கீகாரம் பெற்ற கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா இணைந்து நடத்திய தேசிய அளவிலான கராத்தே போட்டி ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ரா யூனிவர்சிட்டியில் உள்ள உள்விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் 23 மாநிலங்களில் இருந்து சுமார் 1600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 146 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

இப்போட்டியானது 14 வயதுக்குட்பட்டோர், 16 மற்றும் 17 வயது உட்பட்டோர், 18 வயதுக்குட்பட்டவர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான சப் ஜூனியர், கேடட், ஜூனியர் மற்றும் சீனியர்  ஆகிய பிரிவுகளில் தனிநபர் கட்டா, குமித்தே, டீம் கட்டா மற்றும் எடை பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றது. 

போட்டியின் முடிவில், தமிழகத்திலிருந்து 17 தங்கப்பதக்கம், 6 வெள்ளி பதக்கம் மற்றும் 20 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 43 பதக்கங்கள் வென்று ஓவரால் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதன்முறையாக தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த வீராங்கனைகள் வென்று சாதனை படைத்துள்ளனர். 

தமிழ்நாடு மாநில சங்க தலைவர் சாய் ப்ரூஸ், செயலாளர் மோகன் இவர்கள் தலைமையில் ஆசிய நடுவர்கள் மற்றும் சீனியர் மாஸ்டர்கள் அறிவழகன் மற்றும் பீட்டர் பால் ஆகியோர் மாணவர்களை வழி நடத்திச் சென்றனர். 

இதில் கராத்தே மாஸ்டர்கள் பழனிச்சாமி, மோகன், ரவிசங்கர், சீதாலட்சுமி, மோகன் முரளி, மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து பயிற்சி அளித்தனர். மாஸ்டர்கள் ராஜேஷ், நாசர்தீன், பிரகதீஸ் ராஜா, தங்கம், கமாண்டோ ராஜன், நாக மணி,ராஜெரதினம், அருள்கேசவன் ஆகியோர் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். 

வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe