WhatsApp | 9087316855
Advertise

TANEIRA launches 4th Branch of Weavershala in Coimbatore with Mahis Silks and Agencies!

கோவையில் தநைரா, மகிஸ் சில்க்ஸ் அண்டு ஏஜென்ஸிஸ் உடன் வீவர்ஷாலாவின் 4வது கிளையை தொடங்கியுள்ளது!

கோவையில் தநைரா, மகிஸ் சில்க்ஸ் அண்டு ஏஜென்ஸிஸ் உடன் வீவர்ஷாலாவின் நான்காவது கிளையை தொடங்கியுள்ளது!
டாடா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் மேலும் ஒரு புதிய விற்பனை பிரிவான ‘தநைரா’ மற்றும் கோவையைச் சேர்ந்த மகிஸ் சில்க்ஸ் அண்டு ஏஜென்ஸிஸ் உடன் சேர்ந்து சேலை உற்பத்தி செய்வதில் ஒரு முதல் முயற்சியாக ‘வீவர்ஷாலா (நெசவுச்சாலை)-வை கோவையில் தொடங்கி உள்ளது.

டாடா தயாரிப்பான தநைரா (Taneira) உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி நகரில் இரண்டு, சட்டீஸ்கரின் சம்பாவில் ஒன்று என மூன்று நெசவுச்சாலைகளை (Weavershala-வீவர்ஷாலா) வெற்றிகரமாகத் தொடங்கியதை அடுத்து நான்காவது கிளையினைக் கோயம்புத்தூரில் ஆரம்பித்துள்ளது. இம்முயற்சியானது தென்பிராந்திய பட்டு நெய்யும் நுட்பங்களை நவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உட்கட்டமைப்பை மேம்படுத்தி சுகாதாரத்தை சிறப்பாக பராமரிப்பதன் மூலமாக, செயல்பாடுகளுக்கு உகந்த சூழலுடன், சௌகரியமான சுற்றுச்சுழலில் நெசவாளர்கள் பணியாற்ற உதவுவதை இம்முயற்சி முக்கியமாக வலியுறுத்துகிறது.
அவர்களது வளர்ச்சியையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்த கைகட்டி, சிறுமுகை – அன்னூர் சாலை, கோயம்புத்தூர், தமிழ்நாடு முகவரியில் அமைந்த தனது கூட்டு நிறுவனமான மகிஸ் சில்க்ஸ் அண்டு ஏஜென்ஸிஸ் உடன் இணைந்து செயலாற்றுகிறது.

டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் நிர்வாக இயக்குனரான சி.கே.வெங்கடராமன், தநைராவின் தலைமை நிர்வாக அலுவலர் அம்புஜ் நாராயண், மகிஸ் சில்க்ஸ் அண்டு ஏஜென்ஸின் உரிமையாளர் ஆர். மல்லிகார்ஜுனன் ஆகியோர் சிறப்புமிக்க இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.

புதிதாகத் தொடங்கப்பட்ட வீவர்ஷாலா அமைப்பில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் பாரம்பரிய நெசவாளர் சமூகத்தினர் அமர்வதற்காகவே சௌகரியமான இருக்கைகளுடன் கூடிய நவீன நெசவுத்தறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் சி.கே.வெங்கடராமன் பேசுகையில்,

“தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் எங்களது வீவர்ஷாலாவின் நான்காவது கிளையைத் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த முயற்சியின் மூலமாக, நுட்பமிக்க தென்பிராந்திய பட்டு நெசவுக் கலையைப் பாதுகாத்து வளர்ப்பதுடன் தென் பிராந்திய பட்டு நெசவாளர் சமூகத்தை வலுப்படுத்துவதே எங்களது நோக்கம். குறிப்பிட்ட நெசவுச் சமூகங்கள் மத்தியில் நமது கைத்தறி கைவினைப்பொருட்களின் மேம்பாட்டை இலக்காகக் கொண்ட மேம்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையைச் செயல்படுத்துகிறது தநைராவின் வீவர்ஷாலர் குறிப்பாக நாடு முழுவதுமுள்ள நெசவாளர்களின் பணிச்சூழலை உயர்த்துவதில் பங்களிப்பைத் தருகிறது” என்று தெரிவித்தார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe