WhatsApp | 9087316855
Advertise

Temple elephant suddenly faints and dies in Puducherry: CCTV footage

புதுச்சேரியில் கோயில் யானை திடீரென மயங்கி விழுந்து இறப்பு: சிசிடிவி காட்சி

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி (32) திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளது. பாகன் சக்திவேல் இன்று புதன்கிழமை அதிகாலை லட்சுமியை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும்போது, மிஷின் வீதியில் திடீரென்று மயங்கி விழுந்த சிறிது நேரத்திலே இறந்துள்ளது. மயங்கி விழுந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி இறந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி முதல்வராக ஜானகிராமன் இருந்தபோது 1997 ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது தான் யானை லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe