WhatsApp | 9087316855
Advertise

The BJP protested in a traditional way by traveling on a potholed road by camel -video

குண்டும் குழியுமான சாலையில் ஒட்டகம் மூலம் பயணம் செய்து நூதன முறையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

குண்டும் குழியுமான சாலையில் ஒட்டகம் மூலம் பயணம் செய்து நூதன முறையில்
ஆர்ப்பாட்டம்

கோவை மாநகர் மாவட்டம் குறிச்சி மண்டல் பாரத ஜனதா கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் போத்தனூர் வெள்ளலூர் சாலையில் நடைபெற்றது.

போத்தனூர், வெள்ளூர் சாலை, ஜி டி மருத்துவமனை சந்திப்பு முதல் கோணவாய்க்கால் பாளையம் வரை உள்ள சாலை ஓராண்டுக்கு மேலாக மோசமான நிலையில் உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் சாலை மேலும் மோசமாகி வருகிறது. மக்களின் அத்தியாவசிய தேவைகளான ஆம்புலன்ஸ் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பாதசாரிகள் கூட இந்த வழித்தடத்தை பயன்படுத்த முடியாத அளவில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்த க்கூடிய நிலையில் இந்த சாலை மிகவும் மோசமானதாகவும் கடினமாகவும் உள்ளதால் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே பொதுமக்களின் நன்மை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை மீண்டும் சீர் செய்து தார் சாலை அமைத்து தர வேண்டுமென பலமுறை கோரிக்கை மனு அளித்தும் கோவை மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை கண்டித்து இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று மாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பாஜக சார்பில் ஒட்டகம் மூலம் பயணம் செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் குறிச்சி மண்டல் தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மண்டல் பொது செயலாளர்கள் பொன்.ஆனந்தகுமார், சுரேஷ் மற்றும் தளபதி கார்த்தி விக்ரம், சரவணண் துனை தலைவர், விக்னேஷ் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் கனகசபாபதி, தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜ், பிரச்சார அணி மாவட்ட தலைவர் முகாம்பிகை மணி, செயலாளர் வெற்றிவேல் சிறப்புரைஆற்றினார். மாநில பொது செயலாளர் AP.முருகானந்தம் கண்டன உரை ஆற்றினார்.

இதில் மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகள் மற்றும் பொது மக்களும் வியாபாரிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe