WhatsApp | 9087316855
Advertise

The Prime Minister inaugurated the Vande Bharat train service between Coimbatore and Bangalore

கோயம்புத்தூர் – பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் – பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைத்தார்.

கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து, கோயம்புத்தூர் – பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்று துவங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி ஸ்ரீனிவாசன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் சின்ஹா மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள், ரயில்வே பயணிகள் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ரயிலில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி, சொகுசு இருக்கைகள், சுத்தமான கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் என பல்வேறு நவீன வசதிகளும் உள்ளது.

எட்டு பெட்டிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரயில் வரும் 1 ஆம் தேதி முதல் காலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு 11:30 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை அடைகிறது. மறு மார்க்கமாக பிற்பகல் 1:40 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, இரவு 8 மணி அளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரயில் வியாழக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகிறது.

தொழில் நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் இடையே அதிவிரைவு ரயில் சேவை தேவை என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசின் இந்த வந்தே பாரத ரயில் சேவை தொழில்துறையினர், ஐடி ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஜவுளி துறையினர் என பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயிலில் உணவு, ஸ்நாக்ஸ் உடன் கூடிய ஏ.சி. சேர் கார் டிக்கெட் கட்டணம் ரூ.1025 ஆகவும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் டிக்கெட் ரூ.1,910 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய முதல் வந்தே பாரத் ரயில் பயணத்தில் பொதுமக்கள், மாணவர்கள், ஐடி ஊழியர்கள் என ஏராளமானோர் பெங்களூர் நோக்கி உற்சாகமாக பயணத்தை தொடங்கினர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe