WhatsApp | 9087316855
Advertise

Third Silambatta Competitions in Ooty

உதகையில் மூன்றாவது சிலம்பாட்ட போட்டிகள்

நீலகிரி மாவட்ட சிலம்பாட்ட சங்கம் நடத்தும் மூன்றாவது சிலம்பாட்ட போட்டிகள் உதகையில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட சிலம்பாட்ட சங்கம் நடத்தும் சிலம்ப காவலன் முனைவர் ராஜேந்திரன் வழிநடத்ததில் பேரில் நடக்கும் மூன்றாவது மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் இன்று உதகை HADP அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உதகை குன்னூர் கூடலூர் போட்ட ஏரி ஆகிய பகுதிகளில் இருந்து மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு போட்டியிட்டனர். இதில் மாவட்டத் தலைவர் உமாதேவி வழக்கறிஞர், விஜய பாபு தொழில்நுட்ப இயக்குனர் இந்திய சிலம்ப சம்மேளனம் தமிழ்நாடு சிலம்பாட்ட சங்கம் மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜா, மாநில செயலாளர் உதயகுமார், தேசிய நடுவர் ரகுநாதன், தேசிய நடுவர் மதுசூதன், தேசிய நடுவர் கௌதமன், நீலகிரி மாவட்ட செயலாளர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை கோபிநாத், போட்டி இயக்குனர் முத்துமாரியம்மன், செயலாளர் லவ்டேல் ஜெயராம், ஒருங்கிணைப்பாளர் லவ்டேல் பிரபு, போட்டி ஒருங்கிணைப்பாளர் முருகன், போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்கள் சட்டமன்ற உறுப்பினர் கணேசன் மற்றும் உதகை b1 காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் இதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe