WhatsApp | 9087316855
Advertise

Triennial function on behalf of Retired Jailers Welfare Association

ஓய்வு பெற்ற சிறைப்பணியாளர்கள் நலச்சங்கம் சார்பாக முப்பெரும் விழா

ஓய்வு பெற்ற சிறைப்பணியாளர்கள் நலச்சங்கம் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.

கோவை கணபதி பகுதியிலுள்ள கே.பி.ஆர் திருமண மண்டபத்தில் ஓய்வு பெற்ற சிறைப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பாக பொதுக்குழு மற்றும் 11ம் ஆண்டு நிறைவு விழாவும்,12ம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இவ்விழாவானது தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறையினர் ஊதிய விகிதத்திற்கு இணையாக சிறை துறையினருக்கும் ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க கோருதல், சிறைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சீருடை பணியாளர் மரணமடையும் நேர்வில், அருகிலுள்ள சிறையிலிருந்து உதவி சிறை அலுவலர் பதவிக்கு குறையாத அலுவலர் நேரில் சென்று உரிய இறுதி மரியாதை அளித்திட வேண்டும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் மருத்துவ சிகிச்சைக்கான முழு செலவு தொகையும் காசில்லா மருத்துவம் என்ற இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஓய்வூதியத்துடன் மருத்துவ படி ரூபாய் 1000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியர்கள் ஒய்வூதியத்தை ஒப்படைப்பு செய்து பெற்ற தொகைக்கான பிடித்த காலத்தை மற்ற சில மாநிலங்களைப் போல 15 ஆண்டுகள் என்பதை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், மற்றும் ஓய்வூதியாளர்கள் குடும்ப நல நிதி ரூபாய் 2 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தனர்.

இதில் நிர்வாக குழு தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பால்ராஜ், செயலாளர் மயில்சாமி, துணைத்தலைவர் தனபால், பொருளாளர் வேணுகோபாலன், துணைச் செயலாளர் பரமேஸ்வரன், சரக சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம், டாக்டர். கலாவதிபிரபாகர், டாக்டர். துரைக்கண்ணன், மற்றும் கௌரவ கெளரவ அழைப்பாளர்கள், சங்க கெளரவ ஆலோசகர்கள், சங்க நிர்வாகிகள்,கூடுதல் செயற்குழு உறுப்பினர்கள், மாநில சங்கத்திற்கான மாவட்ட பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe