“கோவையில் யூஸ்டு கார் மேளா” -இன்று முதல் துவக்கம்
கோவையில் ஸ்ரீ சாமி கார்ஸ் நடத்தும் யூஸ்டு கார் திருவிழா
*600க்கும் மேற்பட்ட கார்களின் அணிவகுப்பு ஒரே இடத்தில்…
*பழைய கார்களை ஆன்லைன் மூலம் வாங்கி ஏமாறாமல் வாடிக்கையாளர்கள் நேரில் பார்த்து வாங்கும் அனுபவத்தை வழங்கும் “
யூஸ்டு கார் மேளா” -இன்று முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.
கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஸ்ரீ லட்சுமி நாராயணா மண்டபத்தில், பயன்படுத்தப்பட்ட கார்களின் மெகா விற்பனை திருவிழா இன்று ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாறிச்செல்வன் கலந்துகொண்டு மேளாவை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக சென்னை மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் சம்சு அலி கலந்து கொண்டார். உடன், ஸ்ரீ லட்சுமி நாராயணன் மஹால் உரிமையாளர் லலிதா, ஸ்ரீ சாமி கார்ஸ் தலைவர் சந்தோஷ் குமார், சிசிடிஏ செயலாளர் கண்ணன், சிசிடிஏ கௌரவ தலைவர் சேகர், ஸ்ரீ சாமி கார்ஸ் மேலாளர் சோமசுந்தரம் மற்றும் ஸ்ரீ சாமி கார்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விற்பனை மேளா குறித்து ஸ்ரீ சாமி கார்ஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.சந்தோஷ்குமார் கூறுகையில்,
வாடிக்கையாளர்களுக்கு தற்போது உள்ள சூழ்நிலையில், கார்களின் மீது ஏற்பட்டுள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த யூஸ்டு கார் மேளா நடத்துகிறோம். இந்த மேளாவில் பிரமாண்டமான முறையில் 600க்கும் மேற்பட்ட கார்களை பொது மக்கள் நேரில் பார்த்து வாங்கி செல்லாம். அனைத்து கார்களும் ஷோரூம் தரத்தில் காட்சிப்படுத்தியுள்ளோம். இந்த கார் மேளா தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
இந்த மெகா விற்பனை திருவிழாவில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து அனைத்து வகையான பயன்படுத்தப்பட்ட கார்கள் அணிவகுத்து உள்ளது. இதில் இடம்பெறும் கார்கள் மற்றும் அவற்றின் ஆவணங்கள் முழுவதும், சரிபார்க்கபட்டு பரிசோதனை செய்யப்பட்டவை. வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை ஒருமணி நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு விற்பனை கவுண்டர்களும், பேங்க் லோன் வசதியும் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மேளாவில், டிவிஎஸ் கிரிடிட் நிறுவனம் மற்றும் எக்விடாஸ் நிதி நிறுவனங்களின் சார்பில் உடனடி கடன்வசதி மூலம் கார்களை சொந்தமாக்கி கொள்ள முடியும். மிக குறைந்த முன்பணத்தில், மிக குறைந்த வட்டியில் 90% வரை உடனடி கடன் வசதி பெற்று குறிபிட்ட வாகனங்களை எடுத்து செல்லாம். வாங்குவோரும், விற்பவரும் மன நிறைவு பெறும் வகையில், இந்த மேளா அமையும், அதுமட்டுமின்றி பொதுமக்கள் ஆன்லைன் விற்பனை வர்த்தகக்தில் ஏமாறாமல் இருக்கவும் இந்த பழைய கார்கள் விற்பனை மேளா துவங்கப்பட்டுள்ளது. மேளாவில், சிறிய வகை முதல் சொகுசு கார்கள் வரை, ரூ.60 ஆயிரம் முதல் ரூ.60 லட்சம் வரையிலான கார்கள் அணிவகுத்துள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வகையில் கோவையில் மட்டும் இந்த பிரமாண்ட திருவிழா நடைபெற உள்ளது.
கார் தேவைகள் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த கட்டணத்தில் தரமான கார்களை இந்த மேளாவில் வாங்கி செல்லலாம் என்று கூறினார்.