WhatsApp | 9087316855
Advertise

Welcome program for first year students at Sri Narayana Guru College

ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி 

jகோவை க.க சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் இன்று காலை முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கல்பனா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவை என்சிசி குரூப் மண்டல கமாண்டர் கர்ணன் பி வி எஸ் சிவராவ் கலந்து கொண்டு குத்து விளக்கினை ஏற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சாத்து குட்டி நிகழ்ச்சிக்கு தலைமை வைத்து பேசுகையில், மாணவர்கள் சிறந்த குடிமக்களாக உருவாக கனவு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பி.வி.எஸ் சிவராவ் பேசுகையில் , புதிய மாணவர்களை அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இலக்குகள் மீது கவனம் செலுத்தி சிறந்த வாழ்க்கைக்கான முடிவை எடுக்க வேண்டும். மாணவர்கள் கற்கும் கல்வி மூலம் எதிர்காலத்தில் வெற்றி பெறலாம் என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் 2CT என்சிசி கமெண்டிங் அதிகாரி கர்னல் இமானுவேல் தமாங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாக அறங்காவலர்கள் ஸ்ரீஹரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

தொடர்ந்து மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe