WhatsApp | 9087316855
Advertise

Welcome program for first year students in Easa College of Engineering video

ஈசா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்க்கான வரவேற்பு நிகழ்ச்சி

ஈசா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் காண வரவேற்பு நிகழ்ச்சி

கோவை  பாலக்காடு சாலையில் நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரி முதலாம்ஆண்டு மாணவர்கான வரவேற்பு விழா நடந்தது. ஈசா பொறியியல் கல்லூரி தலைவர் டி.ஈ.சுஜாதா தலைமை வகித்தார். தலைமை செயல் அலுவலர் டி.ஈ அஜித் தலைமை நடவடிக்கை அதிகாரி டி.ஈ. ஆதர்ஷ் தலைமையேற்று நடத்தினார்கள். கல்லூரியின் முதல்வர் ராபர்ட் கென்னடி வரவேற்பு வழங்கினார்.

அப்போது மாணவர்களிடையே அவர் பேசுகையில், கல்லூரி கல்வி மாணவர்கள் மாணவர்களுக்கு தகவல் அறிவை கொடுத்தவுடன் திறன் பயிற்சியாளராகவும் உருவாக்குகிறது என்று  கூறினார். கல்லூரியின் தலைமைச் செயலாளர் டி.ஈ. அஜித் தலைமை நடவடிக்கை அதிகாரி டி.ஈ. ஆதர்ஷ் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ந்த லட்சியத்தோடு ஒழுக்கத்தோடு கல்வியை நன்கு கற்க வேண்டும் கல்லூரி பாடத்திட்டத்தோடு தங்கள் தனி திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மாணவர்கள் தன்னிறைவு உடையவர்களாக உருவாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக சீனியர் மேனேஜர் ஆல் பைன் குரூப் யு எ இ வினோத்குமார் ரங்கசாமி மற்றும்  சீனியர் ஹெச் ஆர் யுஏஇ ஆம்ஸ்டெக் கோவை ஜெகன் மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஈசா பொறியியல் கல்லூரியின் முதல்வர் ராபர்ட் கென்னடி துணை முதல்வர் சுனிலா ஜார்ஜ் நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் மற்றும்துணைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe