WhatsApp | 9087316855
Advertise

Y-20 India program at Kongunadu College of Arts and Science

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் Y-20 இந்தியா நிகழ்ச்சி

-ஆளுநர் தமிழிசை சௌநதர்ராஜன் பங்கேற்பு

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் Y-20 இந்தியா நிகழ்ச்சி

-தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌநதர்ராஜன் பங்கேற்பு

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முனைவர் மா.ஆறுச்சாமி கலையரங்கில் Y-20 இந்தியா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌநதர்ராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆளுநருக்கு 4 தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

Y-20 நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அபிஷேக் வரவேற்புரையாற்றினார். கொங்கு நாடு கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் வாசுகி தலைமையுரையாற்றினார்.

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌநதர்ராஜன் பேசுகையில், பழமையும் பெருமையும் மிக்க நமது பாரத நாடு பல துறைகளில் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பல வெற்றிகளைப் பெற்று வருவதை நாம் இன்று கண் முன்பாகக் கண்டு வருகிறோம். இந்த வளர்ச்சியின் மைல்கல்லாக உலகமே போற்றும் வகையில் ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்று அண்மையில் மிகச்சிறப்பாக புதுதில்லியில் உச்சி மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது.

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்னும் கொள்கையை வலியுறுத்தும் “வசுதைவ குடும்பகம்” என்ற பரந்த சிந்தனையுடன் நம் நாடு இந்த ஜி-20 உச்சிமாநாட்டை நடத்தி உள்ளது. உலக மக்கள் அனைவரையும் அன்பால் அரவணைக்கும் இந்தச் சிந்தனை தான் நம் பாரதத்தில் தோன்றிய ரிஷிகளும் ஞானிகளும் நமக்கு அளித்துச் சென்ற மிகப்பெரிய சொத்து. இளைஞர்களுக்குள் இருக்கும் அளப்பரிய ஆற்றலை அவர்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் Y–20 இந்தியா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விதையாய் விழுந்து விருட்சமாக எழுந்தால் இந்த உலகம் வெற்றி பெற்றவர்களை பாராட்டும் என்றார்.

இந்நிகழ்வில் புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன். சிரவையாதீனம் தவத்திரு. இராமனந்த குமரகுருபர சுவாமிகள், கோவை DOBBS பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன், இந்தியன் பப்ளிக் பள்ளியின் நிர்வாக இயக்குநர் கிருத்திகா சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வின் நிறைவில் Y-20 மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் நன்றி தெரிவித்தனர். இதில் மாணவ மாணவிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe